SHARE

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்கள் ஆரம்பித்திருக்கும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது. 

மும்மத தலைவர்களின் ஆசீர்வாத்த்துடன், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அகிம்சை வழியில் அதிஉயர் தியாகங்களை புரிந்த, தியாகதீபங்களான அன்னை பூபதி, திலீபன் அண்ணா அவர்களை வணங்கி திருமதி அம்பிகை செல்வகுமார் இன்றய தினத்தையும் தொடர்ந்துள்ளார்.

நேற்று 3 மணியளவில் நேரலையில் ஆரம்பமான நிகழவுகளில், அருள்மிகு லண்டன் நடராஜர் திருக்கோயில் சிவாச்சாரியார், “சிவாகம ரத்னம்” சிவஸ்ரீ சங்கர் குருக்கள், தமிழர் திருப்பணி மன்றத்தின் வண. பிதா. பிரின்ஸ் குரூஸ் அவர்கள் மற்றும் மக்கள் பணிமனை தலைவர் மதிப்பிற்குரிய மௌலவி சுபியான் அவர்கள் ஆசீர்வாதங்களை வழங்கியிருந்தனர். திருமதி அம்பிகையின் உருக்கமான உரையின் பின்னர் தோழர் தியாகு அவர்கள் சிறப்புரை வழங்கியிருந்தார். இன்னும் பலருடைய உரைகளை தொடர்ந்து 6மணி அளவில் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இன்ற நாளுக்கான நிகழ்வுகள் இலண்டன் நேரம் மாலை மூன்று மணிக்கு நேரலை மூலம் நடைபெற இருக்கின்றன. மும்மத மத தலைவர்களின் ஆசி உரைகளை தாயகத்திலிருந்து திருகோணமலை தென்கைலை ஆதீனம் தவத்திரு. அகத்தியர் அடிகளாரும் இரணைமடு பங்கு தந்தை, வண. பிதா. மடுதீன் பத்திநாதர் அவர்களும், அவர்களும், என்.எம்.அப்துல்லாஹ் ( தலைவர்- யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம்), வழங்க உள்ளனர். திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்களின் உரையுடன் தமிழகத்தில் இருந்து  உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் மற்றும்  மருத்துவ நிபுணர் பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் அவர்களும் அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம் அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.

மேலும் நீதிக்கான கோரிக்கைகளை வலுப்படுத்தும்பல நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.  இதற்கு ஆதரவாக உலகில் பல இடங்களில் அடையாள உண்ணாவிரதங்கள் ஆரம்பியுள்ள நிலையில், இன்று பிரித்தானியாவின் கொவுன்றி பகுதியி்ல் இருந்து வாகன ஆதரவு பேரணியும் இடம்பெறுவது குறிப்படத்தக்கது.  

தற்போது உள்ள கோவிட் நடைமுறைகள் காரணமாக, உறவுகள் நேரில் சமூகளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்றைய நிகழ்வுகளை அனைவரும் இணையதளத்தின் (Zoom) வழியாக கலந்து கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Print Friendly, PDF & Email