SHARE

மாவை சேனாதிராஜா

இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை நிறைவேற்றவும் குற்றவியல் நீதிமன்றுக்கான பொறிமுறைகளை ஏற்படுத்தவும் பிரித்தானியா முன்வரவேண்டும். அதேவேளை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி இனப்படுகொலைக்கான நீதி கோரி பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அம்பிகை செல்வகுமாரின் 8 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா.வில் இலங்கை தொடர்பில் இம்முறை முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ள நிலையில் தமிழினத்தின் விடுதலைக்கான உலக நாடுகளின் கனத்தை ஈர்க்கும் வகையிலும் தன்னை வருத்தி உண்ணாவிரதமிருக்கு திருமதி அம்பிகை செல்வகுமாரை வணங்குகிறோம் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email