SHARE

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று நிறைவடைந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்குமாறும் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாராப்படுத்துமாறு கோரியும் இன்றைய உலக மகளிர் தினத்தை கறுப்பு மகளிர் தினமாக பிரகடனம் செய்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email