SHARE

 – அரசதரப்பில் இருந்து கசிந்துள்ள முக்கிய தகவல்

இலங்கை இனப்படுகொலைக்கு உள்ளான மக்களுக்கு சர்வதேச நீதி கோரி, தமிழர்கள் சார்பில் திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்கள் நாடத்திக்கொண்டிருக்கும் உணவு தவிர்ப்புப்போராட்டம் 13ம் நாளை அடைந்துள்ள நிலையில், பிரித்தானிய அரச தரப்பில் இருந்து புத்துணர்வு ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது இந்த அகிம்சை போராட்டம் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளதுடன், முழுமையான வெற்றி கிடைக்கும் வரை தொடரவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. 

உண்ணாவிரத போராட்டம் மற்றும் அதனால் மக்களிடம் இருந்து ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக, தமிழர் சார்பில் திருமதி அம்பிகை முன்வைத்த நான்கு கோரிக்கைகளில் மூன்றை பிரித்தானிய தொழிற்கட்சி (Labour Party) முழுமையாக அங்கீகரித்து தமது கொள்கை நிலைப்பாட்டை வெளியிட்டிருந்ததுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை கடுமையாக வலியுறுத்தியிருந்தனர்.

தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், நிழல் அமைச்சருமான கௌரவ ஸ்ரிபன் கினோக் (Shadow Minister, Foreign and Commonwealth Affairs) அவர்கள் எழுத்து மூலம் 08 மார்ச் 2021 அன்று இதனை வெளியிட்டிருந்தார். 

இதனைப்போலவே நேற்றய தினம், 11 மார்ச் 2021 திகதியிட்ட கடிதம் ஒன்றின் வாயிலாக, பிரித்தானியாவின் மிதவாத ஜனநாயக்க் கட்சி ((Liberal Democrats) தனது புதிய நிலைப்பாட்டையும் வெளியிட்டிருந்தது.

இந்தக் கட்சியின் தலைவரும், கிங்ஸ்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினருமான, சேர் எட் டேவி (Sir Ed Davey) அவர்களால் கையொப்பமிடப்பட்டு பிரித்தானிய பிரதமருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் வரைவு தமிழ் மக்களுக்கு நீதி வழங்க தவறிவிட்டது என்று கடுமையாக சாடி உள்ளதுடன், திருமதி அம்பிகை செல்வகுமாரால் முன்வைக்கப்பட கோரிக்கைகளில் மூன்றை முழுமையாக ஆங்கீகரித்து, அவற்றை ஐ.நா. தீர்மானத்தில் உள்ளடக்கும்படியும் கோரியுள்ளது. 

பிரித்தானிய, தொழில்கட்சி மற்றும் மிதவாத ஐனநாயக கட்சி என்பன எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவான கட்சியாக இருந்த போதிலும்இ இதுவரை இப்படியான கொள்கை நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில புலம்பெயர் அமைப்புக்கள் பலவருடங்களாக தாம் பல இராஐ தந்திர நகர்வைகளை மேற்கொள்ளுவதாக உரிமை கோரிவரும் போதிலும், அவர்களால் இதுவரை இப்படியான நிலைப்பாட்டை எடுக்கச்செய்ய முடியவில்லை என்பதும், உண்ணாவிரத போராட்டத்தின் விளைவாகவே இந்த நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டன என்பதும் மறுக்கமுடியாத்து.

இதனால் இதனை இந்த உண்ணாவிரத அகிம்சை போராட்டத்தின் முதல்படி வெற்றியாகவே கருத வேண்டும். இதற்கு அடுத்தபடியாக இன்னும் புத்துணர்வு தரும் புதிய தகவல்கள் பிரித்தானிய அரச தரப்பில் இருந்து இன்று வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள திருத்தப்பட்ட இரண்டாவது வரைவில் உண்ணாவிரத போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்றாகிய, சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றுக்கான அனைத்து அம்சங்களும் அடங்கிய புதிய பொறிமுறை உள்ளடக்கப்பட்டுள்ளது. இது IIIM அல்லது IIMM என்று வெளிப்படையாக பெயரிடப்படாவிட்டாலும், அதற்கு சமானமாகவும், அதற்குரிய அனைத்து கூறுகளை உள்ளக்கியதாகவும் இருப்பது தெளிவாகியுள்ளது. 

மேற்படி தகவலை உறுதிப்படுத்தும் வகையில், இன்னுமொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. உருவாக்கப்படவிருக்கும் சுயாதீன விசாரணைப் பொறிமுறையில் நியமிக்கப்படவுள்ள  6 – 8 நிபுணர்களுக்கு வருடத்துக்கு 2 மில்லியன் செலவு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதனை பிரித்தானியா அரசு வழங்கவுள்ளதாகவும்  அந்த தகவல் தெரிவிக்கின்றது.

தமிழர் பிரதிநிதிகளுக்கும் பிரித்தானிய அரசுக்குக்கும் நடைபெற்ற தொடர் கலந்துரையாடல்களிலும்இ உயர்மட்ட இராஐதந்திர அதிகாரி ஒருவர் மூலமும் மேற்படி தகவல் கிடைக்கபெற்றுள்ளது. 

இது திருமதி அம்பிகை அவர்கள் மற்றும் அவர்களின் பின் அணிதிரண்டுள்ள தமி்ழ்மக்களுடைய அகிம்சைப்போராட்டத்திற்கு கிடைத்த முழுமையான வெற்றியாகும். அத்துடன் இந்த போராட்டம் வீணானது, கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியம் அற்றவை என்று மக்களை தவறாக வழிநடத்திவந்த பிரித்தானிய தமிழர் பேரவை போன்ற அமைப்புகளுக்கு இது பெரும் செருப்படியாகவும் அமைந்துள்ளது. 

எனினும் மேற்படி வரைபு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுஇ ஐநாவில் சமர்ப்பிக்கப்படும் வரை இந்த போராட்டம் இன்னும் உத்வேகத்துடன் தொடர வேண்டும். எனவே முழுமான வெற்றியை ஈட்ட, இன்னும் அதிகமான அழுத்தங்களை பொதுமக்கள் பிரிந்தானிய அரசுக்கு பலவழிகளிலும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று உண்ணாவிரத ஆதரவு அணியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த அடிப்படையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் சுயமாக உணர்வெழுச்சியுடன் எதிர்வரும் நாளை மறுதினம் ஞாயிற்று கிழமை (14 .03.2021) கொவிட் விதிகளுக்கு உட்பட்டு, பாரிய எழுச்சிப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

Print Friendly, PDF & Email