SHARE

மெல்லத்திறக்கிறது பிரித்தானியாவின் காதுகள்

இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தழிழ் மக்களிற்கு சர்வதேச நீதி கோரி ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் திருமதி அம்பிகை செல்வக்குமார் முன்னெடுத்துள்ள அறப்போர் இன்றுடன் இருவாரங்களை (14) அடைந்துள்ளது.  

மௌனம் காத்துவந்த பிரித்தானியா வலுவடைந்துள்ள அம்பிகையின் போராட்டத்தினைகண்டு மெல்ல தன் காதுகளை திறக்க ஆரம்பித்துவிட்டன.
பிரித்தானியாவின் தொழிற்கட்சி, மிதவாத ஜனநாயகக்கட்சி என கட்சிகளும் அம்பிகையின் கோரிக்கைரயை நிறைவேற்றவெண்டுமென ஆதரவுக்கரம் நீட்ட ஆரம்பித்துள்ளதுடன் அரசு சில நகர்வுகளை முன்னெடுக்க விளைந்துள்ளன.  

இந்நிலையில், அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒவ்வொருநாழும் நடைபெறும் மெய்நிகர் எழுச்சி நிழகழ்வு வழமைபோல் இன்று பிரித்தானிய நேரம் பி.ப.3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  

மும்மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இன்றைய நிகழ்வில், பிரித்தானியாவின்தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கொளரவ திரு. சாம் ரெரி (Hon. Sam Terry, Member of Parliament, Ilford South, Labour Party), தாயகத்திலிருந்து தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்புசெயலாளரும் ஊடகப்பேச்சாளருமான திரு கந்தையா அருந்தவபாலன் மற்றும் ஈழவிடுதலை ஆதரவுக்காக பல ஆண்டுகளைசிறையில் கழித்த தமிழகம் புதுக்கோட்டை இரா.பாவாணன், ஆழ்கடல் மறவர்கள் சார்பில் முன்னாள் போராளி மணாளன், திருமதி கந்தசாமி அம்மா (கனடா) ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.  

இதேவேளை மிதவாத ஜனநாயக (Liberal Democrats) கட்சியின் தலைவராகியிய Sir Ed Davey அவர்களால் ஐ.நா. விடயத்தில் இலங்கை தொடர்பில் அந்த கட்சியின் நிலைப்பாடு நேற்றய தினம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, வைத்திய கலாநிதி தேவா நாதன்அறிமுக உரையாற்வுள்ளார். தவிர, அம்பிகை செல்வகுமாரின் அறவழிப்போரின் சிறப்பை எடுத்துக்கூறும் விதமாக, எமது தாய் தமிழகத்தில் புகழேந்தி தங்கராஐ் தலைமையில் நேற்றய தினம் இடம்பெற்ற சிறப்பு கவியரங்கத்தின் சில காட்சிகளும் இறுதியாக தியாகம் திருமதி அம்பிகையின் சிறு உரையும்இடம்பெறவுள்ளன.  

இதேவேளை, நேற்றைய 13 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வு வேதாகம வித்தகர்” சிவஸ்ரீ சௌபாக்கிய. சசிகுமாரக்குருக்கள் யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தைஜெபரட்ணம் மௌலவி றிஷ்வான் ஆகிய மும்மத தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமானதுடன்  உண்ணாவிரத களத்தில் இருந்து முன்னாள் போராளி திருமதி.விழியரசி, பிரான்சிலிருந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் செயலாளர் திரு. திருச்சோதி, பிரான்சிலிருந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. சுதன்ராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

அவுஸ்திரேலியா தொழிற்கட்சியின் நியூ சவுத் வேல்ஸ் மாநில  நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ Hugh Mc Dermott,  அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநில மேல் சபை நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ David Shoebridge  ஆகியோர் அம்பிகையின் போராட்டம் குறித்து அனுப்பிவைத்த காணொளிகள் ஒளிபரப்பப்பட்டதுடன் தாய் தமிழகத்தில் இருந்து பேராசிரியர் கலாநிதி தமிழச்சி தங்கபாண்டியனின் உரையும் புகழேந்தி தங்கராஜ் தலைமையில் சிறப்பு கவியரங்கமும் சிறப்பு கவியரங்க காணொளியும் ஒளிபரப்பபட்டது.

14 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும்இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

தொகுப்பு காண்டீபன் கிறஸ்ரி நிலானி
உணவு தவிர்ப்பு போராட்டகுழு

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

Print Friendly, PDF & Email