SHARE

தமிழர்களுக்காக சர்வதேச நீதி கோரி இன்றுடன் 16 ஆவது நாளாக உண்ணமறுத்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அம்பிகை செல்வக்குமாரை காப்பாற்ற கோரி சற்றுமுன்னர் ஒன்று திரண்டுள்ள புலம்பெயர்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியா அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 16 ஆவது நாளாக ஆகாரம் உண்ண மறுத்துவரும் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்துடன் விரைந்து செயற்பட்டு காப்பாற்றுமாறு கோரியுள்ளனர்.

இந்நிலையிலேயே பிரித்தானிய அரசே இனியும் மௌனம் வேண்டாம் எங்கள் தாயின் கோரிக்கைளை நிறைவேற்றி அவரை காப்பற்று என்று கோசங்களுடன் அம்பிகையின் போராட்டக்களத்தின் (அவரின் வீட்டிற்கு முன்) ஒன்றுதிரண்டுள்ள பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் சற்றுமுன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் தற்போது கொவிட் விதிமுறை அமுலில் உள்ள போதிலும் அதற்கு கட்டுபட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேவேளை, குறித்த சூழலில் பெருமளவிலான பொலிஸாரும் குவிக்கப்ட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல்நிலவுகின்றது.

Print Friendly, PDF & Email