SHARE

இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழினத்துக்கு சர்வதேச நீதி கோரி, திருமதி அம்பிகை செல்வக்குமார் ஆகாரம் உண்ணமறுத்து இன்றுடன் 16 ஆவது நாளை எட்டிள்ள நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

மருத்துவர்கள் இனியும் தாமதிக்கவேண்டாம் விரைந்து விரைந்து காப்பாற்றியாகவேண்டும் என அறிவுறுத்தியுள்ள போதிலும் தனது உறுதிப்பாட்டில் நிலையாக உள்ள அம்பிகை உண்ண மறுத்துள்ளதால் போராட்டக்களம் பரபரப்படைந்துள்ளது. இதேவேளை பிரித்தானிய அரசிடம் அம்பிகை முன்வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டுமென  சற்று முன்னர் கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்கள் பெரும் திரளாக எழுச்சி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இருவாராங்களை கடந்தும் உண்ணாமல் நீரைமட்டும் அருந்திக்கொண்டிருக்கும் அவரால் தற்போது எழுந்திருக்க முடியாததுடன் சரிவர பேசமுடியாத மோசமான நிலைக்கு போயுள்ளதால் இன்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இனியும் தாமதிக்கவேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

இதனிடையே அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் மெய்நிகர் (Zoom) வழி எழுச்சி நிகழ்வு வழமை போல் பி.ப. 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மும்மத தலைவர்களின் ஆர்வாதங்களுடன் ஆரம்பமாவுள்ள இந்நிகழ்வில் கோபாலப்பிள்ளை ஜெயசங்கர் அனைத்துலக மக்களவை மற்றும் பன்னாட்டு அரசியல்வாதிகள் பிரமுகர்கள் என பலர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

நேற்றைய 15 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வு தயூர் மரகதாம்பிகை சமேத முருகேஸ்வர கோயில் வணக்கத்துக்குரிய சுரேஸ் குருக்கள், இரணப்பாலை புதுக்குடியிருப்பு தேவாலய அருட்தந்தை மரியதாஸ் ஆகியோரின் அம்பிகைக்கான சிறப்பு புஜைகளுடனும் பிரித்தானியாவிலிருந்து மௌலவி ஷாகிப் அவர்களின் ஆசியுரையுடனும் ஆரம்பமானது.

தொடர்ந்து உண்ணாவிரத களத்திலிருந்து கிஷானி விக்னேஸ்வரராஜா மற்றும் விடுதலைப்போராட்டம் மற்றும் ஈழமக்களின் அரசியல், தமிழகத்தில் ஆழம் பெற தொடர்ச்சியாக செயற்படுபவரும் வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் இயக்குநருமான அருட்தந்தை ஜெகத் கஸ்பார், தமிழகத்திலிருந்து இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரைசாமி ராஜா, ஸ்கொட்லாந்திலிருந்து மனித உரிமை செயற்பாட்டாளர் திரு.சிவகுமார் சிறிபிரவிகரன், அன்புத்தேவன் புலவர் அன்ரனி ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றன.

அத்துடன் திருமதி பூங்கோதை செல்வனின் சிறப்பு கவிதையும் உண்ணாவிரதாய் அம்பிகையின் மாணவியான சுஜாதா சதீஸ் தலைமையில் வழங்கிய சிறப்பு நடனமும் இடம்பெற்றன.

16 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வில் நீங்களும் இணைந்து கொண்டு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்பிகையின் ஆறப்போராட்டத்திற்கு ஆதுரவு தெரிவிக்க பின்வரும் இணைப்பினூடாக பி.ப. 3 மணிக்கு இணைந்து கொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

Print Friendly, PDF & Email