SHARE

-உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கம்

ஐ.நா. வுக்கான பிரித்தானியாவின் தீர்மானத்தின் இறுதி வரைவுக்குள் திருமதி. அம்பிகை செல்வக்குமாரின் கோரிக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது போராட்டம் அதன் இலக்கை அடைவதில் வெற்றிபெற்றதுடன் மற்றும் தமிழ் சமூகத்தின் ஒரு புதிய சாதகமான முன்மாதிரியாக அமைந்துள்ளது என குறித்த அகிம்சை போராட்டத்துக்கான ‘உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கம்’ தெரிவித்துள்ளது.

திருமதி. அம்பிகை செல்வக்குமாரின் அகிம்சை போராட்டத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகிய மேற்படி உண்மைக்கும் நீதிக்குமான போராட்டப் பேரியக்கம் அம்பிகையின் இன்றைய இறுதிநாள் உண்ணாவிரத முடிவின் போது வெளியிட்ட ஊடக அறிக்கை முன்னாள் தமிழீழ வைப்பக ஆளுகை மேலாளரும் பொருளாதார ஆய்வாளருமான திரு.பாலா மாஸ்டரினால் ழுமையாக வாசிக்கப்பட்டது.

அம்பிகையின் அகிம்சைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான பின்னணி, கோரிக்கைகள், வெற்றிகள், எனும் தலைப்புகளிட்டு வெளிடப்பட்டுள்ள 5 பக்கங்கள் கொண்ட குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அம்பிகையின் போராட்ட வெற்றி அகிம்சைபோராட்டங்களின் மூலம் இலக்குகளை அடைய முடியும் எனும் நம்பிக்கையை தருகிறது. மேலும் விடுதலைக்கான போராட்டத்தை மேற்கொள்வதற்கும் தொடர்வதற்கும் உலகளவில் ஈழத் தமிழர்களின் புதிய தலைமுறையினை உருவாக்குவாதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

மற்றும் தமிழ் அல்லாத பல இளைஞர்களை சமூக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை நம்பும்படி அவர் ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது தைரியமான எதிர்பார்ப்பும் போராட்டத்தின் மீதான அவரது உறுதியற்ற அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் இருக்கும். மேலும் இந்தப் போராட்டத்தினை முழுமையாக ஆதரித்து அவர்களின் இடைவிடாத ஆதரவை வழங்கிய மற்றும் அதை ஒரு வரலாற்றறு வெற்றியாக மாற்ற பங்களித்த அனைத்து அமைப்புக்களுக்கும் மக்களுக்கும் நன்றி கூறுகின்றோம். இது உலகெங்குமுள்ள தமிழர்களின் ஒற்றுமைக்கான வெற்றி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email