SHARE

சிரேஸ்ட சட்ட ஆலோசகர் அருண் கணநாதன்

அம்பிகை செல்வக்குமாரின் சர்வதேச நீதிகோரிய போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தாலும் இந்த போராட்டத்தை நாம் தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் முன்னெடுத்து சென்றால் தான் தமிழிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரமுடியும் என சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான திரு. அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து இன்றுடன் 17 நாட்கள் உண்ணாவிரப்போராட்டத்தை மேற்கொண்டிருந்த திருமதி அம்பிகை செல்வக்குமாரின் உண்ணாவிரத நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பிரித்தானிய அரசு அம்பிகையின் போராட்டம் தொடர்பில் நேரடியான பிரசன்னத்தை தவிர்த்திருந்த போதிலும் இன்று பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சிலிருந்து தொலைபேசி வாயிலான அம்பிகையின் நலனில் தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக தெரிவித்ததுடன் அவரின் கோரிக்கைiளில் ஒன்றாவது நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தார்கள் என அவர் கூறினார்.

Print Friendly, PDF & Email