SHARE

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நைஜல் அடம்ஸ் மேலும் கூறியுள்ளதாவது, “பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியன நிகழ்ச்சி நிரலில் மிகவும் முக்கிய வாய்ந்த விடயங்களாக காணப்பட வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு பொறுப்பு கூறல் மிகவும் அவசியமானதொன்றாகும்.

இதேவேளை உலக நாடுகளில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சில தடைகளை விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் மேலும் பலருக்கு தடைகளை விதிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

இதேவேளை இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்காக பிரிட்டனில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவரின் முன்மொழிவுகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email