SHARE

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா.வின் 46/1 பிரேரணை தொடர்பில் சற்று முன்னர் ஜெனிவாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 22 நாடுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் ஐ.நா. வின் புதிய தீர்மானம் வெற்றிபெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வாக்கெடுப்பில் பிரித்தானியா ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவாகவும் சீனா பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் ஈடுபடாது நாடுநிலமை காத்துள்ளன.

இந்நிலையில் அதிகூடிய 22 வாக்குகளைப்பெற்ற நிலையில் இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email