SHARE

இலங்கையுடன் இணக்கப்பாடு எட்டப்படாதது குறித்து பிரித்தானியா கவலை

இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறாது தடுப்பதை நோக்கமா கொண்டு இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் பிரித்தானியாவால் இன்று  ஐ.நா. வில் தாக்கல் செய்யப்பட்டது.

நடைபெற்று வரும் ஐ.நா. வின் 46 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா.வால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பிலான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றதுடன் 11 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஐ.நா.வின் புதிய தீர்மானத்திற்கு ஆதரவாக பிரித்தானியா ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவாகவும் சீனா பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் ஈடுபடாது நாடுநிலமை காத்திருந்தன.

இந்நிலையிலேயே, இந்த வாக்கெடுப்பின் போதான பிரித்தானியாவின் இலங்கை குறித்த தீர்மானம் பிரித்தானிய பிரதிநிதி ஜூலியன் ப்ரைத்வைட் இனால் வாசிக்கப்பட்டது.  கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாக தாக்கல் செய்யப்பட குறித்த பிரேரணையில் ஒருமித்த கருத்து மூலம் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற அழைப்பு விடுத்தது.

அதேவேளை, இலங்கையுடன் இணக்கப்பாடு எட்டப்படாதது குறித்து கவலை வெளியிடப்பட்டதுடன் இந்த தீர்மானம் இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களினதும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டதுடன் கடந்தகால மனிம உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதை தடுபதை நோக்கமாக கொண்டது என அதில் தெரிவிக்கப்பட்டது. 

Print Friendly, PDF & Email