SHARE

மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூத உடலுக்கு வடகிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து திரண்டு வந்த பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பாக மதங்கள் தாண்டி பொத்துவில் முதல் பொலிகண்டி பேரியக்க தலைவர்கள் திரண்டு வந்து அஞ்சலித்துள்ளனர்.

இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக இன்றைய தினம் திங்கட்கிழமை (5)  மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு   துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

வீதிகள் வீடுகள் எங்கும் கறுப்பு மற்றும் வெள்ளை  நிற கொடிகள் பறக்க விடப்பட்டு ஆயருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

Print Friendly, PDF & Email