SHARE

தென்மராட்சி மிருசுவில் J/334 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஆசைப்பிள்ளை ஏற்றம் 52து படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள 50ஏக்கர் தனியாருக்கு சொந்தமான நிலத்தை சுவீகரித்து இராணுவத்துக்கு நிரந்தரமாக முகாமமைப்பதற்காக நிலவளவைத்திணைக்களத்தால் இன்றைய தினம் அளவிடு செய்யவிருந்த போது காணிக்குசொந்த உரிமையாளரான புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச்சேர்ந்த T.மகேஸ்வரி அம்மாவும் அவருக்கு ஆதராவாக சமூக செயற்ப்பாட்டாளர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்குவருகைதந்த சாவகச்சேரி பிரதேசசெயலர் சம்மந்தப்பட்ட உரிய அதிகாரிகளுடன் கதைத்து ஒருமுடிவிற்க்கு வரும்வரை அளவிடுசெய்ய வேண்டாம் என்று நிலவளவைத்திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு சென்றதன்பின் நில அளவைத்திணைக்கள அதிகாரி இராணுவமுகாமுக்குள் சென்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் A9 வீதியை மறித்து வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இராணுவமுகாமுக்குள் சென்ற நில அளவைத்திணைக்கள அதிகாரி வெளியே வந்தால்த்தான் வீதியைவிட்டு நாம் அகல்வோம் என்றுதெரிவித்தனர். இந்த நிலையில் A9 வீதியானது 40நிமிடம் அளவில் தடைப்பட்டது அதன்பின் உள்ளே சென்ற நிலஅளவைத்திணைக்கள அதிகாரி வெளியே வந்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியபின்புதான் போராட்டம் கைவிடப்பட்டது.

Print Friendly, PDF & Email