SHARE

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என பிரித்தானிய விசேட தீர்ப்பாயம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்துள்ள நிலையில் தற்போது குறித்த தடை தொடர்பில் 90 நாட்களுக்குள் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டுப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீர்ப்பினை தீர்வாக மாற்ற பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழரின் தலைவிதி தமிழரின் கையினில் தீர்ப்பினை தீர்வாக மாற்றுவோம் என்ற வாக்குறுதியுடன் பிரித்தானியா வாழ் தமிழர்கள் தாம் வாழும் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கோடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

அந்தவகையில் www.lifttheban.uk என்ற இணைப்பினை அழுத்தி அதில் தோன்றும் ‘Click Here To Email Your MP‘ என்ற பட்டனை அழுத்தியதும் தோன்றும் புதிய திரையின் இறுதிப்பகுதியில் உங்கள் முகவிரை (Postcode) பதிவு செய்து ‘Find my MP‘ என்ற பட்டனை அழுத்தியதும் உங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுப்புவதற்கான திரை தோன்றும். அதில் உங்கள் பெயர் மின்னஞ்சல் ஆகியவற்றை பதிவு செய்து ‘Submit‘ பட்டனை அழுத்தியதும் இறுதியான திரையில் ‘I agree‘ என்ற பெட்டியை அழுத்தி, பின்னர் கீழ் உள்ள confirm & Send என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உங்களது பாராளுமன்ற உறுப்பினருக்கு குறித்த மின்னஞ்சல் சென்றுவிடும்.

இவ்வாறு பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களும் தத்தம் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெரும் அழுத்தமாக அது மாற்றமடைவதுடன் குறித்த தீர்ப்பினை தீர்வாக வழங்க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.

இந்நிலையில் குறித்த செயற்பாட்டினை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் விரைந்து செயற்படுத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2018ம் ஆண்டு பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்கும்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மனு மூலம் விண்ணப்பித்திருந்தது. அந்நேரம் துரதிஷ்டவசமாக மேலும் தடையைத் தொடர உள்துறை அமைச்சகம் தீர்மானித்தது.

அதனைத்தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீடு செய்திருந்தது. அப்போதைய உள்துறை அமைச்சு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடிப்பதற்கு முடிவெடுத்தது. அவ்வேளையில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையத்தின் வல்லுநர் குழு தடை மீளாய்வு குறித்து முடிவு ஒன்றை எடுத்திருந்தது. அவ்முடிவானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை என்பது அடிப்படை சட்ட வரையறைகளுக்கு முரணானது என்பதை விசேட தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அமைச்சரின் பணிந்துரை கூட்டுப் பயங்கரவாதப் பகுப்பாய்வு மையத்தின் (JTAC) கருத்துகளைத் துல்லியமாகச் சரியாக சுருக்கித் தரவில்லை என்றும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம் கண்டறிந்தது. இந்தச் செய்திகள் “மிக துல்லியமாக கவனிக்கப்பட வேண்டியவை” என்று ஆணையம் கருதியது. ஆகவே தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் நீடித்து வைத்துக் கொள்ளும் முடிவு பிழையானது என்று தீர்ப்பளித்தது.

அந்தவகையில நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மேல்முறையீடு வெற்றி பெற்றது. இந்த வெற்றி படியின் அடுத்தகட்டமாக, உள்துறை அமைச்சரின் மூல முடிவு நீக்கம் செய்யப்பட்ட போது தடைநீக்க விண்ணப்பத்தை மீளாய்வு செய்யக் கால அவகாசம் தருமாறு அமைச்சர் மேல்முறையீட்டு ஆணையத்தை வேண்டிக் கொண்டார். மேல்முறையீட்டு ஆணையம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யக் கோரும் விண்ணப்பத்தை மீளாய்வு செய்வேன் என்ற உள்துறை அமைச்சரின் உறுதிமொழியை பிப்ரவரி 18ஆம் நாள் ஏற்றுக்கொண்டது.

Print Friendly, PDF & Email