SHARE

பிரித்தானியாவிலிருந்து சட்டத்தரணி அற்புதன்

தமிழ் மக்களின் குரலை அடக்கும் நோக்கின் முயற்சியாகவா இலங்கை அரசு யாழ்ப்பாண மேயரை கைது செய்தது என பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணியும் அரசியில் ஆய்வாளருமான அற்புதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். நகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட யாழ்.நகர காவல் படை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாண மேயர் வி.மணிவண்ணன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே சட்டத்தரணி அற்புதன் நமது ஈழநாடு இணையத்திற்கு வழங்கிய விசேட வீடியோவில் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

அதில் மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டுன் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் யுத்தம் நிறைவடைந்தது என அறிவித்த இலைங்கை அரசு இன்றும் புலிகள் இருக்கிறார்கள் என்ற பிரமிப்பை ஏற்படுத்துவதற்கான நோக்கம் என்ன. அத்ததுடன் ஒரே நாடு என்ற கொள்கைக்குள் கொழும்பு மாநகர சபைக்கு ஒரு சட்டம் யாழ். மாநகர சபைக்கு ஒரு சட்டம் என்ற நிலைப்பாடு எதற்காக என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email