SHARE

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலம் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தடையை நீக்க கோரி கடந்து 23 ஆம் திகதி வேல்ஸிலிருந்து ஆரம்பமான நடைபயணம் சற்று முன்னர் லண்டன் வெஸ்மினிஸ்டரில் உள்ள பிரதமர் வாசல்ஸ்தல முன்றலை அடைந்துள்ள நிலையலல் அங்க ஓன்று திரண்ட தமிழர்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேல்ஸிலிருந்து சுமார் 130 மைல்களுக்கு மேல் நடந்து நேற்றைய தினம் லண்டன் மாநகருக்குள் நுழைந்த தமிழர்கள் குழு இன்று புதன் கிழமை காலை லண்டன் ஈலிங் அம்மன் ஆலய முன்றலிருந்து பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தினை நோக்கிய தமது இறுதி நாள் நடைபயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தினில் தடையினை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சிற்கு சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது.

இந்தக்காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் மக்கள் தடை நீக்கத்துக்கான அழுத்தத்தினை பிரித்தானிய அரசுக்கு முன்வைக்க வேண்டுமென்ற நோக்கிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை வழங்கவேண்டுமென்ற நோக்கிலும் இந்த மாபெரும் நீண்ட தூர பரப்புரை நடைபயணம் இடம்பெற்றது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி வேல்ஸில் (CF99 1SN) ஆரம்பமான இந்த பரப்புரரை நடைபயணம் சுமார் 130 மைல்களுக்கு மேல் கடந்து வந்துஇன்றைய 6 ஆவது நாளில் வெஸ்மினிஸ்டரில் உள்ள பிரதமர் வாசல்ஸ்தலத்தை சென்றடைந்துள்ளது.

Print Friendly, PDF & Email