SHARE

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு முயற்சியாக, பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெறும் பிரச்சாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், நேற்றைய தினம் Liberal Democrat’s party தலைவரும் கிங்ஸ்ட்ன் பகுதி பாராளுமன்ற உறுப்பினருமான sir Ed Davey  யுடனான இராஜதந்திர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளரான கெளசிகன் சசிகுமாரினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சந்திப்பு கோவிட் விதிமுறை காரணமாக மெய்நிகர் வழி ஊடாக (Zoom) இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில், விடுதலைப்புலிகள் மீதான தடையால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், இலங்கையில் தொடரும் சித்திரவதை மற்றும் இன அழிப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துச்சொல்லப்பட்டது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்போராட்டத்தில் தடையினை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சிற்கு சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது.
இக்காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மூலம் நீதிமன்றில் பெறப்பட்ட வெற்றியை நடைமுறைப்படுத்தி அரசியல் வெற்றியாக மாற்றும் வகையிலேயே இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இந்த கலந்துரையாடலில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினரான திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. நிமலன் சீவரத்தினம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்களான கிறிஸ்ரி நிலானி காண்டீபன், குணரெத்திணம் யுவராஜ், அனோஜன் சிவபாலன், இகீதரன் ராசேந்திரா, விஜய் விவேகானந்தன், சதீஸ் குலசேகரம், விநோதன் கனகலிங்கம், சைலேசன் சிதம்பரநாதன், சதேந்லொயிற்றன் புயலீந்திரன், கதாகாரன் நாகராஜா, யதுகுலகண்ணா ரவீந்திரநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்

Print Friendly, PDF & Email