SHARE

தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலுமுள்ள தமிழர்கள் போரில் படுகொலைசெய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவிலும் புலம்பெயர் தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அந்தவகையில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பிரிதமர் வாசல்ஸ்தல முன்றலிலும் ஓக்ஸ்பேர்ட் நகரிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்திலும் முள்ளிவாய்கக்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னால் காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் செயற்பாட்டாளர்கள் சிலர் அடையாள உணவுதவிரப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை இலங்கையில் யுத்தத்தால் உயிரிழந்தவர்களை பெயர் விபரங்களுடன் ஆவணப்படுத்தி, சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பித்து இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை சட்ட ரீதியாக நிரூபிக்கும் நோக்கில் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான ITJP, தவல்களை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து உறுதிப்படுத்தும் அமெரிக்காவில் உள்ள HRDAG என்ற நிறுவனடன் இணைந்து முன்னெடுத்துவரும் இறந்தவர்களின் விபரங்களைத்திரட்டும் பணியும் அதன் செயற்பாட்டளர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Print Friendly, PDF & Email