SHARE

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்களுக்கு 3 நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று அதிகாலை 5 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. குறித்த காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேற்றைய தினம் கொள்வனவு செய்திருந்தனர். இதனையடுத்து, நேற்று நள்ளிரவு 11 மணி முதல் பயணக்கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அன்றையதினம் காலை 4மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

அதன் பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 4ஆம் திகதி வரை  அமுல்படுத்தப்படவுள்ளன.

4 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பதோடு, அன்று இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடுகள் 7ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், எதிர்வரும் 31 மற்றும் 4ஆம் திகதிகளில் மாத்திரமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளதுடன், அன்றைய தினம் மாத்திரம் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் சென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email