SHARE

யாழ்.நகரப்பகுதி மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் ட்ரோன் கமரா மற்றும் பொலிஸ் ரோந்து நடவடிக்கையின்போது தேவையற்று வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நகர்பகுதியிலும், நகரை அண்டிய பகுதிகளிலும் ட்ரோன் கமரா மூலம் பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு மற்றும் விமானப்படை பிரிவினர் இணைந்து சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பயணத்தடையை மீறி, தேவையற்று வீதிகளில் நடமாடிய 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக
யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ கூறியுள்ளார்.இன்று காலை யாழ்.நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கேமரா கண்காணிப்பின் போதே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டோரில் சிலர் முகக்கவசம் அணியாது வீதியில் நின்றமையாலும்
சிலர் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்த போன்ற குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email