SHARE

பிரித்தானியாவில் விடுதலைமப்புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க, அந்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப்பெறும் கலந்துரையாடல்கள் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் East Ham தொகுதிக்கான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Stephen Timms எம்.பி.யுடனான சந்திப்பினை மேற்கொண்ட குழுவினர், விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்துக்கு ஆதரவாக பாராளுமன்றில் குரல் எழுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதான செயற்பாட்டாளர் குலசேகரம் சதீஸ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு பிரித்தானியாவின் கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டு மெய்நிகர் வழி ஊடாக (Zoom) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடுகந்த தமிழீழ அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான சொக்கலிங்கம் யோகலிங்கம், ஆறுமுகம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன் ஆகியோரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான கீத் குலசேகரம், கரோலின் றொபின்சன், எமி டோலி ஆகியோரும் பிரதான பேச்சாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான டினேஸ் நவரத்தினம், விஜய் விவேகானந்தன், விசிதரன் சதாசிவம், விதுரா விவேகானந்தன், அனோஜன் சிவபாலன், கதாதரன் நாகராஜ், பிரசன்னா பாலச்சந்திரன், கபிலன் அன்புரத்தினம், சுபதர்ஷா வரதராசா, சிவனந்தராசா சிவதர்சன், கொளசிகன் சசிக்குமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்போராட்டத்தில் தடையினை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சிற்கு சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது.
இக்காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மூலம் நீதிமன்றில் பெறப்பட்ட வெற்றியை நடைமுறைப்படுத்தி அரசியல் வெற்றியாக மாற்றும் வகையிலேயே இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Print Friendly, PDF & Email