SHARE

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு போர்க்காலத்தில் திட்டமிட்ட பொலிஸ் சித்திரவதை மற்றும் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்பு வகித்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ணவின் நியமனம் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதியினை வழங்குவதற்கான எந்த வாய்ப்பினையும் இல்லாமல் செய்கின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் (ITJP) நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

எனவே காணாமல் போனோர் அலுவலகத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டாம் எனக் கோரி ஐ.நா.வின் அமைதியை கட்டியெழுப்பும் நிதியம் மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களுக்கு கடிதம் அனுப்புவோம் என குறிப்பிட்டுள்ளார்.

காணமல் போனோர் அலுவலகத்திற்கு ஹப்பு ஆராச்சிகே ஜெயந்த சாந்த குமார விக்ரமரட்ண நியமிக்கப்பட்டமை அது கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு (ITJP) என்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், திட்டமிட்ட பொலிஸ் சித்திரவதை மற்றும் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு பொறுப்பு வகித்தமைக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டால் உலகளாவிய சட்ட மேலாதிக்க வழக்குகளுக்கு முகம் கொடுக்கும் ஆபத்தில் உள்ள ஒருவர் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளமை உண்மைக்கு புறம்பானது

இலங்கையின் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டார் என ஐ.நா. விசாரணையில் பெயர் குறிப்பிடப்பட்ட மூன்று பொலிஸ்பிரிவின் அதிபராக இவர் இருந்தவர். இவ்வாறு முன்னைய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இடைக்கால நீதிப்பொறிமுறை முழுமையாக இராணுவமயமாக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கை பின்வருமாறு,

Final-OMP-RO-Press-Release-Tamil-translation

Print Friendly, PDF & Email