SHARE

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் தொடர்பாக ஆராய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்தியாவசிய தேவைக்காக இவ்வாறு கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கின்றவர்கள் உண்மையிலேயே குறித்த தேவைக்காகத்தான் வருகைத் தந்துள்ளனரா என்பது தொடர்பாக குறித்த குழுக்கள் ஆராயவுள்ளன.

இதன்போது பொய்யான தகவல்களை வழங்கி அநாவசிய தேவைகளுக்காக கொழும்பு நகருக்குள் வந்துள்ளமை தெரியவந்தால் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email