SHARE

பயங்கரவாத தடுப்பு பிரிவை  ‘தடுத்து வைக்கும் இடம்’ என்று பெயரிட்டு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) பிரிவு 9 இன் கீழ் இந்த அறிவிப்பு ஜூன் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகிய நான்,இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 ஆம் பிரிவின் நடவடிக்கைகளுக்காக தடுத்துவைக்கும் இடமாக அறிவிக்கிறேன் என குறித்த வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு ‘தடுத்து வைக்கும் இடம்’ என இந்த அறிவிப்பின் ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரிவு 9 என்பது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்திருப்பதைக் குறிக்கிறது.

அதன்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைக்க இந்த வசதி பயன்படுத்தப்படவுள்ளது.

Print Friendly, PDF & Email