SHARE

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானம் இலங்கையின் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்யும் விதத்தில் அமைந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்யும் நடவடிக்கை அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை 2018 இல் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்ததை தூதுவர் வரவேற்றுள்ளார்.  இலங்கை தன்னை அர்ப்பணித்துள்ள ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளிற்கு பொறுப்புக்கூறலும் நீதியை பெறுவதற்கான சமமான வாய்ப்பும் முக்கியமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email