SHARE

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவொன்று அடுத்தமாத இறுதியில் இலங்கையில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுகிறதா என்று ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.

அதற்கமைய நாட்டின் நிலவரங்களை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணித்து வருவதாக இலங்கைக்கான தலைமை அதிகாரி டெனிஸ் சாய்பி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்பி பிளஸ் சலுகைக்கான 2021-2022 மீளாய்வின் ஆரம்பக் கட்டத்தில் இப்போது இருப்பதாகவும், இந்த மீளாய்வு அறிக்கை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம்  இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ச்சியான தொடர்புகளில் இருப்பதாகவும், அடுத்த மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவை எதிர்பார்ப்பதாகவும், இலங்கைக்கான தலைமைப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email