SHARE

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் இன்று (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.  உள்நாட்டு போர் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.  இந்நிலையில் இதற்காக நீதி கோரியும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் முகமாகவும் கடந்த 12 வருடங்களாக சுழற்சி முறைல் பல போராட்டங்களை உறவுகள் முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தங்களது வீடுகளிலிருந்தபடியே அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை உறவுகள் முன்னெடுத்தனர்.  முல்லைத்தீவில் தொடர்ச்சியாக நீதிகோரி போராட்டம் நடத்திவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் போனவர்கள் எப்போது திரும்புவார்கள், இந்த விடயத்தில் இலங்கையை நம்பப்போவதில்லை போன்ற வாசகங்களை ஏந்தியே போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Print Friendly, PDF & Email