SHARE

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாட்டில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு கடுமையான கண்டத்தினை தெரிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘நேற்று நள்ளிரவில் இருந்து அவசரகால நிலைமை ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உணவு விநியோகத்தினை அத்தியாவசிய சேவையாக பிரகனடப்படுத்துவதற்காக இவ்விதமான நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டிற்கு அச்சுறுத்தலான நிலைமைகள் காணப்பட்டாலோ அல்லது அத்துடன் தொடர்பான விவகாரங்களுக்காக மட்டுமே இவ்விதமான சட்டத்தினை பயன்படுத்த முடியும்.

இவ்விதமான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே பொதுமக்கள் பொதுசுகாதார அவசர நிலைமையை பிரகடனப்படுத்தும் சட்டத்தினை இயற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். அதற்காகவே என்னால் தனிநபர் பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை நிறைவேற்றுவதற்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதாக கூறியிருந்தனது.

இருப்பினும் அதற்கு முன்னதாக அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியே நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால சட்டங்களை வகுப்பதற்கு முடியும். சட்டமியற்றும் அதிகாரமும் ஜனாதிபதியின் கையிற்கே சென்றடையும்.ஆகவே அதனை நாம் வலுவாக கண்டிக்கின்றோம்”  என்றார்.

Print Friendly, PDF & Email