SHARE

நினைவேந்தல், நிகழ்வு அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுதல் போன்றவற்ற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞரர் யுவதிகளை சிறிலங்கா காவல்துறையும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சர்வதேச உண்மை மற்றும் நீதிதிட்டத்திற்கான அமைப்பு ( ITJP ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதில் ITJP யின் சர்வதேச விசாரணையாளர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடம் விசாரணை அறிக்கைகளை பதிவு செய்ததாகவும் அவர்கள், 2019 நவம்பரில் கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதைக்குள்ளானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அதிகமானோர் இந்த ஆண்டு நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) போராட்டத்தில் பங்கேற்றவர்கள். மற்றும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேநந்தல்கள் மற்றும் காணாமல் போனோருக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் என அதிர்ச்சித்தகவல்கள் அந்த அறிக்கையில குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐவுதுP இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ஜெனீவாவில் இலங்கையை பற்றி விவாதிக்கும் போது பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறல் வேண்டும் என ITJP யின் நிர்வாக இயக்குனர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ITJP வெளியிட்டுள்ள இலங்கையில் தற்போது நடைபெறும் சித்திரவதைகள் பற்றி அதிர்ச்சிதரும் புதிய அறிக்கை

https://mcusercontent.com/ca164182f4e5cb8f9def49a7f/files/2d974c06-01c1-b7d5-7a27-dd2f879bc65a/ITJP_The_Black_System_V3.pdf

Print Friendly, PDF & Email