SHARE

கிளாஸ்கோவில் இருந்து காலநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாயவின் வாகனம் என்று கூறப்பட்ட ஒரு வாகனத்தை தமிழ் மக்கள் இடைமறித்த நிகழ்வானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotel இனை இன்று அதிகாலை முதல் சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள், தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹோட்டலிலிருந்து கோத்தபாய வாகனம் ஒன்றில் பயணிப்பதான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்தைத் தொடர்ந்து, அந்த வாகனத்தை இடைமறித்து கோசங்களை எழுப்ப ஆரம்பித்தனர் ஆர்பாட்டக்காரர்கள். அதனைத் தொடர்ந்து அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டதுடன், காவல்துறையினரும் பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

Print Friendly, PDF & Email