SHARE

யாழ். கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலே கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருந்தன.

இருப்பினும் அங்கு கூடிய காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில் ஈடுபட்டுள்ளனர்.

அடாத்தாக கடற்படையினர் கைப்பற்றியுள்ள குறித்த காணிகளை மீட்டுத்தருமாறு பலதடவைகள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தபோதும் இதுவரை அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குறித்த காணியை மீளப் பெற்றுத்தருவதாக வடக்கு ஆளுநராக இருந்த சுரேன் ராகவன் உறுதியளித்திருந்த போதும் இதுவரை அந்த காணிகள் தம்மிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email