SHARE

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய லூசியம் கிழக்கு பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும்இ மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) உப தலைவருமான ஜெனட் டாபி (Hon Janet Daby) வலியுறுத்தியுள்ளார்.

சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யகோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி விஜய் விவேகானந்தன் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கி நமது ஈழநாட்டுக்கு அவர் வழங்கிய விசேட காணொளியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் இலங்கையில் நடைபெற்ற நடைபெற்றுவரும் தொடர் சித்திரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளியான சவேந்திர சில்வா மீது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பை மேற்கொள்ளவேண்டும் என கோரியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் இது தொடர்பில் தமிழ் தரப்புக்களுடன் இடம்பெற்ற மெய்நிகர் கலந்துரையாடலில் ஜெனட் டாபி அவர்கள் புதிதாக உருவாகியுள்ள மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவில் (APPG for Magnitsky Sanctions) இதனை ஆராய்வதாகவும்இ தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email