SHARE

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் ஹரோ தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கரத்தோமஸ் (Gareth Thomas MP) தொரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான stephen timms, Janet Daby, Sir Ed Davey , Virendra Sharma, Sarah Jones உள்ளிட்ட பல எம்.பி.க்கள் சவேந்திர சில்வாக்கு தடை விதிக்கப்படவேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையிலேயே தொடர்ச்சியாக கரத்தோமஸ் எம்.பி.யும் சவேந்திரசில்வாக்கு எதிரான தடையை கோரியுள்ளார்.

யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாக்கு எதிரான தடை தொடர்பான செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பொன்னையா யோகராஜ் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்கி கரத்தோமஸ் எம்.பி. வெளியிட்டுள்ள காணொளியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறிலங்காவில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் நிழல் படங்கள் என அதிகம் உள்ளன. அங்கு சிறிலங்கா படையினரால் யுத்தக்குற்றம் இடம்பெற்றமைக்கான சாட்சியங்கள் உள்ளன. இதில் தற்போது சிறிலங்காவின் இராணுவத்தளபதியாக உள்ள சவேந்திர சில்லவா இறுதி யுத்தத்தின் போது யுத்தக்குற்றங்களை புரிந்துள்ளார் என்பதற்கான போதிய ஆதாரங்களை ITJP அண்மையில் வெளியிட்டிருந்தது. சவேந்திர சில்வாவிவன் தலைமையின் கீழான படையினரே யுத்தக்குற்றங்;களை அரங்கேற்றினர்.

இந்நிலையில் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் பிரித்தானியா தடைசெய்ய வேண்டும். பிரித்தானிய வெளியுறவுத்திணைக்களம் இது தொடர்பில் கவனம் தெலுத்தவேண்டும் என கோருவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email