SHARE

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Sarah Jones

சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய அரசைக்கோருவதாக தொழிலாளர் கட்சியின் Croydon Central தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Sarah Jones தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா தடை தொடர்பில் தமிழ் தரப்பினருடன் இன்று நடைபெற்ற மெய்நிகர் (Zoom) கலந்துரையாடலின் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர் தனது உத்தியோக பூர்வ கீச்சிலும் (Twitter) சவநேத்திர சில்வாவுக்கு எதிராக தடை கோருவதாகவும் தனது தொகுதியில் உள்ள தமிழ் சமூகத்திடம் இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் தாக்கங்கள் தொடர்ந்தும் இருப்பதை உணர முடிவதாகவும் அதேவேளை, உலகெங்கும் உள்ள தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரி காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாக்கு எதிரான தடை தொடர்பான இராஜதந்திர நகர்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் அவர்களின் தலைமையில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான Hon.stephen timms MP, Hon. Janet Daby , Rt.Hon.Sir Ed Davey MP, Gareth Thomas MP, Virendra Sharma உள்ளிட்ட சுமார் 20 மேற்பட்ட எம்.பி.க்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை (12) செயறட்பாட்டாளர் பிரசன்னா பாலச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் தலைமையில் Hon. Sarah Jones MP உடனான மெய்நிகர் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தொழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் பணிப்பாளர் சென் கந்தையா, ICPPG யின் பணிப்பாளர் அம்பிகை கே செல்வகுமார் மற்றும் செயற்பாட்டாளர் விஜய் விவேகானந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email