SHARE
எல்.ஜே.எல். செல்வநாதன் (NEWSREPORTER)

தமிழீழ மக்களுக்குப் பூர்வீகமான தனித்துவமான தேசம் உள்ளது. அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது.அந்த அடிப்படை உரிமையின் அடையாளமான தமிழீழத் தேசியக் கொடி 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ந்திகதி முதல் தடவையாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழத்தின் தேசியக் கொடியாக அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நவம்பர் 21ந் திகதியை தமிழீழத் தேசியக் கொடி நாளாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முரசறைந்தது.பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தினால்கொடியின் தனித்துவத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.

நேற்று நவம்பர் 21ந்திகதி பிற்பகல் பிரித்தானியாவிலுள்ள பல தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஓக்ஸ் போட்டில் அமைந்துள்ள தமிழர் வரலாற்று மையத்திலிருந்து மாவீரர் பெற்றோர்களின் மதிப்பு அளிப்பு நிகழ்வின் பின்னர் தேசியக் கொடி வாகன பவனியாக Trafalgar சதுக்கத்திற்கு எடுத்து வரப்பட்டது.

பின்னர் அங்குபாண்ட் வாத்திய அணிவகுப்புடன் மைய இடத்திற்கு தேசியக்கொடி கொண்டுவரப்பட்டு சதுக்கத்தில் பிரத்யேக இடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப்பட்டது.

Print Friendly, PDF & Email