SHARE

”மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ்மீது உறுதி.வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி’’

பிரித்தானிய கொடி ஏற்றப்பட்டதனைத்தொடர்ந்து வரலாற்று மைய மேலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியுடன் உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பொதுச்சுடரினை லெப்.கேணல் நிர்மலனின் புதல்வி ஏற்றினார்.

அதனைத்தொடர்ந்து திறந்த வெளி அரங்கில் நேர்த்தியாக ஈழத்தின் மாவீர் துயிலுமில்லங்கள் போல் அமைக்கப்பட்டிருந்த மாவீர் நினைவு படங்களிற்கு முன்னால் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் தீபங்கள் ஏற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அங்கு பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் நேர்த்தியாக பார்வைக்கும் அஞ்சலிக்கும் வைக்கப்பட்டிருந்ததுடன் பிரதான மண்டபத்தில் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

கடும் குளிரிலும் பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இம்முறை பெருமளவிலான மக்கள் உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு மாவீர்களை அஞ்சலிக்க வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி-எல்.ஜே.எல்.செல்வநாதன்

Print Friendly, PDF & Email