SHARE

பிரித்தானியாவில் தமிழ் மொழியையும் அதன் பண்பாட்டையும் கலைகளையும் கொண்டாடும் வண்ணம் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக London Assembly எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாக அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டு வரலாற்று பதிவு உருவாகியுள்ளது.

பெருநகர அவையின் கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கனடாவில் இதே போன்று பிரகடணம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆதனைத் தொடர்ந்து இன்று லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும்இ பண்பாட்டையும்இ கலைகளையும் கொண்டாடும் வண்ணம்இ தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை எதிர்வரும் தைமாதம் கடைப்பிடிக்கும் வகையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லண்டன் பெருநகர அவையின கென்சவேட்டிவ் உறுப்பினர் நிக் றொஜர்ஸ் அவர்களால் இன்று பிற்பகல் இந்தபிரேரணை முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வரவாற்று சாதனையை சாத்தியமாக்குவதில் கடுமையாக உழைத்த பலரில் குறிப்பாக, பழமைவாதக் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பை (British Tamil Conservative – BTC) சேர்ந்த கலாநிதி அர்ச்சுனா சிவநாதன், கவுன்சிலர் ஜே கணேஸ், திரு கஜன்ராஜ் மற்றும் தொழில்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது.

Print Friendly, PDF & Email