SHARE

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற உள்நாட்டு போரில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் கணக்கிடப்படவில்லை. இது தொடர்பில், இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத்திட்டம் (International Truth and Justice Project -ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவாய்வுக் குழு (HRDAG) ஆகிய அமைப்புக்களால் இலங்கையில் “இறந்தவர்களை கணக்கெடுத்தல் செயற்றிட்டம்” (Counting the Death Project) என்ற பணி உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

புள்ளிவிவர அணுகுமுறையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்து ஒரு முடிவை எய்துவதே இச்செயற்பாட்டின் நோக்கமாகும்.

அந்தவகையில், “இறந்தவர்களை கணக்கெடுத்தல் செயற்றிட்டம்” (Counting the Death Project) என்ற பணியினை மேற்கொண்டு வருகின்ற பிரித்தானிய தொண்டர் குழுவினால் Oxford உலகத்தழிழர் வரலாற்று மையத்தில் இல் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் இறந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்ட எமது உறவுகள் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கியதன் மூலம் இச்செயற்பாட்டினை சிறப்புற மேற்கொள்ள முடிந்ததாக முதன்மை மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான திரு. சசிகரண் செல்வசுந்தரம், திரு. சைலேசன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

மேலும், இத் தகவல் சேகரிப்பில் விஜய் விவேகானந்தன், விதுரா விவேகானந்தன், சதீஸ் குலசேகரம், சதேந்லொயிற்றன் புயலேந்திரன், பிரசன்னா பாலச்சந்திரன், கிறிஸ்ரி நிலானி காண்டீபன், அரவிந்தராஜ் நல்லதம்பி, குணரத்தினம் யுவராஜ், சிதம்பரா சுப்பிரமணியன், கிருபானந்த மனுநீதி மனுமயூரன், கிறிஸ்ரியன் நவீந்திரராசா அன்ரன் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறந்தவர்கள் தொடர்பாக விபரங்கள் தெரிந்தவர்கள் அவற்றை தங்களிற்கு தந்துதவுமாறு மேற்படி பிரித்தானிய செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். அனுப்பவேண்டிய முகவரி: info@hrdag.org or itjpsl@gmail.com.

Print Friendly, PDF & Email