SHARE

தனது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்த வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராசா எம்மிடையே மதத்தை திணிக்கவேண்டாம்.தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கவேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கே.சிவாஜிலிங்கம் வடக்கு ஆளுநர் வடக்கு மாகாணம் ஒரு தனி நாடு எனவும் தான் அதன் ஜனாதிபதியெனவும் நினைத்து செயற்படுகின்றார்.

அதேவேளை தனது சிங்கள பௌத்த எஜமான்களை திருப்திப்படுத்த முற்பட்டுள்ளார். ஆரியகுள விவகாரம் தொடர்பில் அவர் எடுத்துள்ள தேவையற்ற நடவடிக்கைகளை கைவிடவேண்டும். தவறுமிடத்து வடக்கு ஆளுநர் வடக்கில் எங்கும் நடமாடமுடியாதவாறு முடக்கப்படவேண்டிய சூழல் ஏற்படுமெனவும் கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் அனைத்து மக்களும் நொந்துபோயுள்ளனர்.அவர்கள் ஓரளவு மன அமைதி தேட ஆரியகுளம் போன்ற மையங்கள் உதவுகின்றன.

இந்நிலையில் ஏன் இடையில் ஆரிய குளத்தை ஆளுநர் மதவிடயத்தில் நுழைக்கிறார் என்பது புரியவில்லை. அதற்காக யாழ்.மாநகர முதல்வரை அடிபணிய வைக்க முற்படுவது மன்னிக்கப்பட முடியாததொன்று. அவ்வாறு ஒரு நெருக்கடி யாழ்.மாநகரமுதல்வருக்கு ஏற்பட வடக்கு ஆளுநர் காரணமாக இருப்பாரானால் அவரது நடமாட்டத்தை முடக்கும் வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.

Print Friendly, PDF & Email