SHARE

பிரித்தானிய இளையோரின் தொடரும் இராஜ தந்திர நகர்வுகள்

இனப்படுகொலையாளி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய அழுத்தம் வழங்கும்படி கோரி, பிரித்தானிய நிழல் அமைச்சரும் (Shadow Minister) லூசியம் டெப்பேட் (Lewisham Deptford) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய விக்கி ஃபாக்ஸ்குரொப்ட் (Hon. Vicky Foxcroft) உடனான இராஜதந்திர சந்திப்பு ஒன்று மனித உரிமை செயட்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான கீத் குலசேகரம் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளரும், அண்மையில் சித்திரவதையில் தப்பித்தவருமான, திரு. கோபிநாத் கந்தசாமி அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த சந்திப்பு, கோவிட் காரணமாக மெய்நிகர் வழி (zoom) வழியாக இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பில், திரு. சென் கந்தையா (Chair of Tamils For Labour) மற்றும் திருமதி. அம்பிகை கே செல்வகுமார் (Director of ICPPG) ஆகியோரும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்டு தங்கள் கருத்தினை முன்வைத்தனர். 

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் 1,40,000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கண மக்கள் காயமுற்றதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கியவரும், வைத்தியசாலைகள் மற்றும் பொதுமக்கள் மீதான எறிகணை தாக்குலை நேரடியாக கட்டளையிட்டவருமான சவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் தொடர்பான ஆதாரங்களை பிரிந்தானிய வெளிவிவகார அமைச்சிடம் ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்துள்ள போதிலும் பிரித்தானிய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அழுத்தம் வழங்க கோரி வருவதாக, திரு கீத் குலசேகரம் எடுத்துரைத்தார்.

சவேந்திர சில்வாவை அமெரிக்கா தடை செய்த பின்னரும் பிரித்தானியா தடை செய்யாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தொடர்ந்தும் தவறும் பட்சத்தில் தமிழர்கள் சட்ட நடவடிக்கையை நாட நேரிடும் என்றால் சென் கந்தையா தெரிவித்தார்.

இலங்கையில் ஆயுதபடைகளால் தொடரும் கடத்தல் சித்திரவதைகளுக்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும் ஒருசில மாதம் முன்னர
சித்திரவதைக்கு உள்ளாகியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை ICPPG திரட்டி வைத்திருப்பதாகவும், அவற்றை பிரிந்தானிய அரசுக்கு வழங்க தயார் எனவும் திருமதி. அம்பிகை கே செல்வகுமார் தெரிவித்தார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

அனைவரும் முன் வைத்தா கருத்துக்களைஉள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்கள் சார்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்தார். அத்துடன் பிரித்தானிய உள்துறை அமைச்சகத்துக்கு எழுதும் கடிதத்தில் பாதிக்கப்பட்ட தஞ்சம் புகுந்த தமிழ் மக்களை சந்தித்து ஒரு கலந்துரையாடல் செய்வதட்கும் ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். 

அத்துடன் இச் சந்திப்பில் நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்களான விதுரா விவேகானந்தன், துவாரகன் சிவகுமார், வசிதரன் சதாசிவம், நிலக்ஜன் சிவலிங்கம், கோபிநாத் கந்தசாமி, சசிகரன் செல்வசுந்தரம், விஜய் விவேகானந்தன், ரவிக்குமார் ரஜீவின் உட்பட இன்னும் சிலர் கலந்துகொண்டனர்.

சவேந்திர சில்வாவை தடைசெய்யும் முயற்சியை தமது கையில் எடுத்துள்ள பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர், இதுபோன்று இதுவரை 30 மேற்பட்ட பாராளுமன்ற சந்திப்புக்களை நடாத்தி ஆதரவை திரட்டியுள்ளனர். சவேந்திர சில்வா தடை செய்யப்படும் வரை சந்திப்புக்களும் ஏனைய முயற்சிகளும் தொடரும் என்றும் தெரிவுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email