SHARE

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் எந்தவொரு அரச பதவியையும் வகிக்கக் கூடாது என்று நாடெங்கும் தொடர்ச்சியான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் பிரதானமாகக்கொண்ட 15 பேர் அடங்கிய அமைச்சரவையை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற முன்னாள் அமைச் சர்களுடனான சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. புதிய அமைச்சரவ நேற்று பதவியேற்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரசியல் பேரங்கள் தொடர்வதால் அதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

15 பேரைக் கொண்ட அமைச்சர வையானது இன்று நியமிக்கப் படலாம் என்றும் அறியமுடிகின்றது. எனினும் இந்த அமைச்சரவையில் பஸில் ராஜபக்ச நாமல் ராஜபக்ச சமல் ராஜபக்ச சசீந்திர ராஜபக்ச ஆகியோர் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காதிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

இதொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு முக்கிய அமைச்சு பதவி ஒன்று வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாமல் ராஜபக்ச வகித்த இளைஞத் விளையாட்டுத்துறை அமைச்சு அவருக்கு வழங்கப்படலாம். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இ.தொ.காவின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த உபாயம் வகுப்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாயண நிதியத்துடனான கேபச்சுவார்த்தைகள் நாளை ஆரம்பமாகவிருப்பதால், அதற்கு முன்னர் அமைச்சரவையை அமைத்து நாடு உறுதியாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Print Friendly, PDF & Email