SHARE

450 கிராம் நிறையுடைய பாணின் விலையை ரூ. 30 அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை ரூ. 10 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இற்கு முன்னர் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூ.130 ற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு இறாத்தல் பாண் நாளை முதல் ரூ.160 ற்கு விற்பனை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பஸ் கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (19) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். அதற்கமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக ரூ.27 அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email