SHARE

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு முதலில் நாட்டில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்

Print Friendly, PDF & Email