SHARE

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா மீதான தடை ஆகிய கோரிக்கைகளுடன் பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட முன்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட பாரிய குற்றங்களுக்காகவும்இ தற்போதும் இலங்கையில் தொடரும் ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைக்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்ற அடிப்படையிலும்இ இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை பிரித்தானிய அரசு தடைசெய்ய வேண்டும் என்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் பிரித்தானிய புலம்பெயர்வாழ் தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி முயற்சியின் பலனாகவே முன்பிரேரணைக்கு இப்பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்து 12 வருடங்களாகிவிட்டது என்ற தலைப்புடன் ஸ்கொட்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் Anne McLaughlin MP தலைமயிலான 6 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கொண்டுவரப்பட்ட இலக்கம் 64 முன்பிரேரணைக்கே இதுவரையில் 33 எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் தாம் வசிக்கும் பிரதேசங்களை பிரதிநித்திதுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மெய்நிகர் வழியாகவும் நேரடியாகவும் தொடர்சந்திப்புக்களை மேற்கொண்டு அவர்களிடம் தமிழ் மக்கள் மீது சிங்கள இனவாத அரசு நிகழ்த்திய பாரிய மனித இனப்படுகொலையையும் அதனை நிகழ்த்திய அதிகாரிகள் இன்றும் பதவிகளில் அமர்த்தப்பட்டு இலங்கை அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களுக்கு தெளிவுபடுத்தி வருவதுடன் தமக்கான நீதியை பெற்றுத்தரும்படி கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email