SHARE

நாடு இருளில் மூழ்கடிக்கப்படுமானால் இந்தியாவிடம் நிதியுதவி பெறுமாறு தன்னிடம் கோர வேண்டாம் என பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

695 பில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்புப் பிரேணையை முன்வைத்து கருத்துரைத்த போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று எரிபொருள், நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உரம், மருந்துகள், உணவு உள்ளிட்டவற்றுக்கு ஏனைய நாடுகளிடம் இருந்து ஓரளவு உதவிகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள், நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு ஏனைய நாடுகள் உதவி வழங்குவதில்லை எனவும், இந்தியா மாத்திரமே இதற்கான உதவிகளை வழங்குவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தியாவின் கடன் உதவி முடிவடையும் நிலையில் காணப்படுவதாகவும், அடுத்த கட்ட நிதியுதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, நாடு இருளில் மூழ்கடிக்கப்படுமானால் இந்தியாவிடம் நிதியுதவி பெறுமாறு தன்னிடம் கோர வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்குள்ளேயே உதவிகள் கிடைக்கப் பெற்றால் மாத்திரமே தம்மால் உதவிகளை வழங்க முடியும் என சர்வதேச நாடுகள் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மின்சார தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்குமாயின் வீதிகளில் இறங்கவும், எதிர்ப்பு கோஷம் எழுப்பவும் முடியும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, நாட்டை இருளில் மூழ்கடிக்க வேண்டாம் எனவும், அவ்வாறு இருளில் மூழ்கடிக்கப்படுமானால் இந்தியா கடனுதவி வழங்கும் என தம்மால் உறுதியளிக்க முடியாது எனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்கும் எரிபொருள் அவசியமாகவுள்ள நிலையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் அந்த நாட்டில் சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email