SHARE

கிளிநொச்சியில் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள பொதுச் சந்தை இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு அங்கமாக கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி இன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 37 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் 110 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

200 மில்லியன் ரூபா செலவில் அங்கு மேலும் மூன்று கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற சந்தைக் கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், 25 வருடங்களின் பின் யாழ். குடாநாடு தேசிய மின் வலையமைப்புடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இணைத்து வைக்கப்பட்டது.

லக்சபானா மின்சாரத்தை யாழ்.குடாநாட்டிற்கு கொண்டு செல்வதற்கென கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மின்விநியோகத்திட்டத்தை ஜனாதிபதி இன்று பார்வையிட்டு ஆரம்பித்து வைத்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு:

காலை 10.45மணியளவில் கிளிநொச்சி வந்த ஜனாதிபதி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். மேலும் இந்த திட்டம் ஜப்பான் நாட்டின் சுமார் 3200 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படுகின்றது.

இத்திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் சுமார் 132 கிலோவாட் மி ன்சாரத்தை பெறமுடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கென சுமார் 238 மின்கம்பங்களின் மூலம் மின் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படுகின்றது.

Print Friendly, PDF & Email