SHARE

சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்று சபை கூட்டம் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளியாக்கும் குற்ற விசாரணை நாடாளுமன்ற குழுவின் தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், அது குறித்து எடுக்க வேண்டிய தீர்மானங்களை ஆராய்வதும் இந்த கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மாலை 4 மணிக்கு ஆரம்பித்த குறித்த சந்திப்பு தற்போதும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றபிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற குழுவினர் நேற்று தமது பணிகளை நிறைவுறுத்தியிருந்தனர்.

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 14 குற்றச்சாட்டுகளில், 5 விசாரிக்கப்பட்டதுடன், அவற்றில் 3 தொடர்பில் பிரதம நீதியரசர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இதேவேளை, குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உள்ளதா என்பது தொடர்பில் எதிர்வரும் 13 ம் 14 ம் திகதிகளில் உயர்நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

Print Friendly, PDF & Email