SHARE

பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றும் தயான் ஜெயதிலக, சிறிலங்கா அதிபரிடம் சேவை நீடிப்புக் கோராமலேயே நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.

சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவராக கருதப்படும் தயான் ஜெயதிலக பாரிசில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சிறிலங்காவுக்கான தூதுவராகப் பணியாற்றியிருந்தார்.

மேலும் ஒரு ஆண்டு அவர் சேவை நீடிப்புக் கோரிப் பெறமுடியும் என்ற போதும், அதற்கு விண்ணப்பிக்காமல் கொழும்பு திரும்ப முடிவு செய்துள்ளார்.

வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் அவர் கொழும்பு திரும்பவுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, தயான் ஜெயதிலக வெளியிட்ட கருத்து சிறிலங்கா அரசாங்க மட்டத்தில் பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

சிறிலங்கா அரசுக்கும் தயான் ஜெயதிலகவுக்கும் இடையில் அண்மைக்காலமாக சுமுகமான உறவு நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email