SHARE

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூற இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கவலை கொண்டுள்ளதாக கனேடிய வெளிவ்வகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.

கனடாவில் தஞ்சடைந்துள்ள சிறிலங்கா இராணுவ கப்டன் பிரியசாந்த, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் தொடர்பாக கனேடிய அதிகாரிகளிடம் சாட்சியமளித்துள்ளது குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, 2008ம் ஆண்டு சிறிலங்கா இராணுவ கேணல் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டு வைக்குமாறு தனக்குப் பணித்ததாக இவர் கூறியிருந்தார்.

ஆனால் அவர் தான் எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்றோ, குண்டுவைக்குமாறு உத்தரவிட்ட கேணலின் பெயரையோ அவர் வெளியிடவில்லை.

இந்தநிலையில், கப்டன் பிரியசாந்த எனப்படும் ரவீந்திர வடுதுர பண்டாரகே, சிங்க றெஜிமென்டைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email